Diploma in Magazine Art -- [பத்திரிகை ஓவியப் பயிற்சி்]

இன்று பத்திரிகை துறை Mass Media என்னும் வெகுஜன சாதனமாக திகழ்கிறது. பத்திரிகைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதற்கேற்ப பத்திரிகை ஓவியர்கள், லே அவுட் ஆர்ட்டிஸ்ட்டுகள், கார்டூனிஸ்ட்டுகள் அதிகமாகி இருக்கின்றார்களா? என்றால்... இல்லை! ஏதேனும் ஒரு பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று இது பற்றி விசாரித்துப் பாருங்கள். பத்திரிகை ஓவியர்களின் தேவையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வீர்கள். இன்று தமிழில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட தினசரி, வார, மாத, மாதமிருமுறை இதழ்கள் வெளிவருகின்றன. பத்திரிகை உலகில் ஓவியர்களின் தேவை மிக அதிகம். கடினமாக உழைக்க முடிந்தவர்கள் ஏராளமாக பணம் சம்பாதிக்கலாம். புகழ் உண்டாகும்.

பத்திரிகை ஓவியமும் கம்ப்யூட்டரும்

இந்த கணிப்பொறி யுகத்தில் பத்திரிகைத் துறையில் கம்ப்யூட்டர்கள் ஏராளமான வேலைகள எளிதாக செய்து முடிக்கின்றன என்பது உண்மைதான். கம்ப்யூட்டர்களின் வரவு அச்சுப் பணியைத்தான் நவீனமாகவும் விரைவாகவும் மாற்றி இருக்கிறதே தவிர, ஆர்ட்டிஸ்ட்டுகளின் வேலையைக் கணிப்பொறியால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. அடிப்படை ஓவியங்கள ஓவியர்கள வரைய வேண்டியுள்ளது. ஏனெனில் கம்ப்யூட்டர் என்பது சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ள தான். ஆனால் ஓவியர்களா ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் உருவங்கள கற்பனை செய்யும் படைப்புலக பிரம்மாக்கள். எனவே இவர்கள் இல்லாமல் பத்திரிகை உலகில் ஒரு அணுவும் அசையாது. கம்ப்யூட்டர் தன்னிடம் பதிவு செய்து வைத்துள்ள கிளிப் ஆர்ட் என்னும் படவரிசை கள மட்டும் திருப்பித் தருமே தவிர, ஒரு புதிய படத்தை உருவாக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. அந்த வேலையை ஒரு ஓவியர் தான் செய்து கணிப்பொறிக்கே வழங்க வேண்டும். இதுதான் உண்மை.

பத்திரிகை ஓவியப் பயிற்சியின் பாடத்திட்டம்

நமது பத்திரிகை ஓவியப் பயிற்சி Diploma in magazine art ன் பாடத் திட்டங்கள் மிகக் கவனமாக தயாரிக்கப்பட்டவை. நமது ஆசிரியரே பல்லாண்டு காலம் பத்திரிகையாளராகப் பணியாற்றி, சொந்தமாக பத்திரிகையும் நடத்திய அனுபவம் உடையவர். நமது பயிற்சியின் பாடத் திட்டங்கள் பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர்கள், பலதரப்பட்ட பத்திரிகை ஓவியர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் ஓவியம் வரையும் முறைகள அடிப்படையிலிருந்து விளக்கி தன்னிச்சையாக மனித உருவங்கள் வரைதல் விலங்குகள், பறவைகள் வரைதல், வாஷ் டிராயிங், லைன் டிராயிங், ம்தீபிரஷ் டிராயிங், கொலாஜ் டிராயிங் போன்றவைகளும் கதைப்படங்கள், பத்திரிகை ஓவியத்தில் புதிய உத்திகள், காமிக்ஸ் என்னும் படக்கதைகள், பலவித எழுத்துக்கள், பத்திரிகை லே அவுட், புத்தக மேலட்டைகள், கிரேயான் சித்திரங்கள், வண்ணப்படங்கள், இவை பற்றிய ஏராளமான பாடங்களும் பிறர் உதவியோடு கம்ப்யூட்டரில் படங்களப் பயன்படுத்துதல், பத்திரிகைகள அணுகும் முறை. வாய்ப்பு இவைகளும் விளக்கப்பட்டுள்ளன.

பயிற்சிக்காலம்

இந்தப் பயிற்சிக்கான காலம் ஆறு மாதங்கள். இதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ. 6000/ ஆகும். மொத்தமாக செலுத்த விரும்பினால் ரூ. 4500/ செலுத்தினால் போதும். அல்லது மூன்று தவணைகளில் ரூ, 2000/ + ரூ.2000/ + ரூ. 2000/ என்றும் செலுத்தலாம். பயிற்சிக் கட்டணத்தை முதலிலேயே முழுவதுமாக செலுத்துவோர் மூன்று மாத கால பயிற்சியிலும் தவணை முறையில் செலுத்துவோர் ஆறுமாத கால பயிற்சியிலும் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்தப்பயிற்சி முழுக்க முழுக்க அஞ்சல் வழிப் பயிற்சி மட்டுமே. இப்பிரிவில் சேர கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். பயிற்சியின் முடிவில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஐந்து நாட்கள் சிறப்பு நேர்முக வகுப்புகள் நடைபெறும். இதற்கு தனிக்கட்டணம் உண்டு. இது பற்றிய விவரம் பாடத்தோடு அனுப்பப்படும்.

போனஸ்

கடந்த ஆண்டுகளில் தனிப்பிரிவாக நடத்தி வந்த கேலிச் சித்திரம் வரைதல் என்ற பிரிவையும் இப்போது பத்திரிக்கை ஓவியத்தோடு இணைத்துவிட்டோம். இதில் முக பாவங்கள் நவரசம், நகைச்சுவை ஜோக்குகள், அரசியல் தலைவர்களின் கார்ட்டூன்கள், விலங்குகள், பறவைகளின் கேலிச் சித்திரங்கள் சில நிமிடங்களில் வரைதல் ஆகியவை உள்ளன. இது உங்களுக்கு கூடுதல் போனஸ் ஆகும். இப் பயிற்சியின் முடிவில் Diploma in magazine art என்ற அழகியச் சான்றிதழ் வழங்கப்படும்.

 

 

More Details